வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றம் முற்றுகை… ராகேஷ் டிக்கைட் எச்சரிக்கை

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றம் முற்றுகை… ராகேஷ் டிக்கைட் எச்சரிக்கை

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் 40 லட்சம் டிராக்டர்களில் டெல்லிக்கு பேரணியாக சென்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம் என்று விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் சிகரில் நடந்த யுனைடெட் கிசான் மோர்ச்சாவின் கிசான் மாகபஞ்சாயத்தில் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் பேசினார் அப்போது அவர் கூறியதாவது: சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படாவிட்டால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவார்கள். இந்த முறை நாடாளுமன்ற முற்றுகைக்கு அழைப்பு இருக்கும்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றம் முற்றுகை… ராகேஷ் டிக்கைட் எச்சரிக்கை
ராகேஷ் டிக்கைட்

நாங்கள் அதை அறிவித்த பின்னர் டெல்லியை நோக்கி பேரணியாக செல்வோம். இந்த முறை நான்கு லட்சம் டிராக்டர்களுக்கு பதிலாக 40 லட்சம் டிராக்டர்கள் இருக்கும். டெல்லி பேரணிக்கு எந்த நேரத்திலும் அழைப்பு விடுக்கப்படலாம் என்பதால் விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தை முற்றுகை செய்வதற்கான நாள் ஐக்கிய முன்னணியின் தலைவர்களால் தீர்மானிக்கப்படும்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றம் முற்றுகை… ராகேஷ் டிக்கைட் எச்சரிக்கை
விவசாயிகள் போராட்டம் (கோப்பு படம்)

இந்தியா கேட் அருகே உள்ள பூங்காக்களை உழுது அங்கு பயிர்களை வளர்ப்பார்கள். ஜனவரி 26ம் தேதியன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது தங்களின் (விவசாயிகள்) இமேஜை கெடுக்க ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது. நாட்டின் விவசாயிகள் தேசிய கொடியை விரும்புகிறார்கள் ஆனால் இந்த நாட்டின் தலைவர்கள் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.