டெல்லிக்குள் மீண்டும் டிராக்டர் நுழையும்.. நாடாளுமன்றத்தில் மண்டி திறப்போம்.. மத்திய அரசை எச்சரிக்கும் டிக்கைட்

டெல்லிக்குள் மீண்டும் டிராக்டர் நுழையும்.. நாடாளுமன்றத்தில் மண்டி திறப்போம்.. மத்திய அரசை எச்சரிக்கும் டிக்கைட்

டெல்லிக்குள் மீண்டும் டிராக்டர் நுழையும், நாடாளுமன்றத்தில் மண்டி திறப்போம் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் விவசாயி சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட்.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக பிரசாரம் செய்வதற்காக பாரதிய கிஷான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிக்கைட் விமானத்தில் கொல்கத்தா சென்றார். அங்கு விமான நிலையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டோலா சென் அவரை வரவேற்றார். கொல்கத்தாவில் ராகேஷ் டிக்கைட் பேசுகையில் கூறியதாவது: டெல்லிக்குள் மீண்டும் டிராக்டர்கள் நுழையும்.

டெல்லிக்குள் மீண்டும் டிராக்டர் நுழையும்.. நாடாளுமன்றத்தில் மண்டி திறப்போம்.. மத்திய அரசை எச்சரிக்கும் டிக்கைட்
டிராக்டர் பேரணி (மாதிரிப்படம்)

எங்களிடம் 3.5 லட்சம் டிராக்டர்கள் மற்றும் 25 லட்சம் விவசாயிகள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் எங்களது பயிர்களை விற்பனை எங்களது அடுத்த இலக்கு. விவசாயிகளால் மண்டிக்கு வெளியே தங்களது பயிர்களை விற்பனை செய்ய செய்யலாம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் மண்டி சிறந்தது என்று நான் உணருகிறேன். வர்த்தகர்கள் உள்ளே, விவசாயிகள் வெளியே. அங்கு கட்டாயம் கொள்முதல் நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டெல்லிக்குள் மீண்டும் டிராக்டர் நுழையும்.. நாடாளுமன்றத்தில் மண்டி திறப்போம்.. மத்திய அரசை எச்சரிக்கும் டிக்கைட்
நாடாளுமன்றம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெறக்கோரியும் டெல்லியின் பல எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் 100 நாட்களை தாண்டி நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் மத்திய அரசோ வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய தயார், அவற்றை திரும்ப பெற முடியாது என்று உறுதியாக கூறிவிட்டது. இதனையடுத்து விவசாயிகள் தங்களது போராட்டத்தை டிராக்டர் பேரணி, ரயில் மறியல், பந்த், பா.ஜ.க.வுக்கு எதிராக தேர்தல் பிரசாரம் என பல்வேறு வழிமுறைகளில் தீவிரப்படுத்தி வருகின்றனர்.