ராஜஸ்தான் காங்கிரஸ் உட்கட்சி மோதல்களை தீர்த்து கொண்டால் மக்களுக்கு நன்மை பயக்கும்.. பா.ஜ.க.

 

ராஜஸ்தான் காங்கிரஸ் உட்கட்சி மோதல்களை தீர்த்து கொண்டால் மக்களுக்கு நன்மை பயக்கும்.. பா.ஜ.க.

ராஜஸ்தான் காங்கிரஸ் உட்கட்சி மோதல்களை தீர்த்து கொண்டால் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று பா.ஜ.க. எம்.பி. ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் நிலவுகிறது. இந்த விவகாரத்தை குறிப்பிட்டு, ராஜஸ்தான் காங்கிரஸ் தனது உட்கட்சி மோதலை தீர்த்து கொண்டால் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று பா.ஜ.க. எம்.பி. ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ராஜஸ்தான் அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் பாதி முடிந்து விட்டது. ஆனால் மக்கள் இன்னும் அவர்களின் தேவைகளில் பின்தங்கி நிலையில் உள்ளனர்.

ராஜஸ்தான் காங்கிரஸ் உட்கட்சி மோதல்களை தீர்த்து கொண்டால் மக்களுக்கு நன்மை பயக்கும்.. பா.ஜ.க.
சச்சின் பைலட், அசோக் கெலாட்

அவர்கள் (காங்கிரஸ்) தங்கள் (உட்கட்சி) மோதல்களை தீர்த்துக் கொண்டால் அது மக்களுக்கு நன்மை பயக்கும். காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைமை பலவீனமடையும்போது, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானை போல் மற்ற தலைவர்கள் சொந்த முடிவுகளை எடுக்க தொடங்குகிறார்கள். மத்திய அரசின் கொள்கைகளை மாநில அரசால் அடி மட்டத்தில் செயல்படுத்த முடியாது. உதாரணமாக, ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் மத்திய அரசு கடந்த ஆண்டு ராஜஸ்தான் அரசுக்கு ரூ.2,500 கோடி அனுமதித்தது. ஆனால் அவர்கள் ரூ.650 கோடி மட்டுமே செலவிட்டார்கள்.

ராஜஸ்தான் காங்கிரஸ் உட்கட்சி மோதல்களை தீர்த்து கொண்டால் மக்களுக்கு நன்மை பயக்கும்.. பா.ஜ.க.
ராஜ்யவர்தன் ரத்தோர்

நீங்கள் அடிமட்ட அளவில் வேலை செய்து அவர்களுடைய பணத்தை அவர்களுக்காக பயன்படுத்தினால் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும். ராஜஸ்தான் காங்கிரசில் உள்கட்சி மோதல்கள் உள்ளன. அதற்கு அவர்கள் வெளிப்புற காரணிகளை அவர்கள் குறை கூறுகிறார்கள். அசோக் கெலாட் அனைவருக்கும் மாநில அரசாங்கத்தில் வெவ்வெறு பதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். அந்த பதவிகளை அவர்கள் கோர வேண்டிய நேரம் வரும்போது பிரச்சினைகள் எழுகின்றன. அதனால்தான் அவர் கூட்டங்களை ஒத்திவைக்கிறார், மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.