மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முழக்கம்: மியூட் செய்து ஒளிபரப்பிய ராஜ்ய சபா டிவி!

 

மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முழக்கம்: மியூட் செய்து ஒளிபரப்பிய ராஜ்ய சபா டிவி!

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதை மியூட் செய்து ராஜ்ய சபா டிவி ஒளிபரப்பியது.

மக்களவையில் வேளாண் மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ததில் இருந்தே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பாஜகவுடன் கூட்டணியில் இருந்த கட்சி எம்.பிக்கள் உட்பட இந்த மசோதாக்களுக்கு எதிராகவே வாக்களித்தனர். அந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என எம்.பிக்களின் செயல் நன்றாக உணர்த்திய நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக சிரோன்மணி அகாலிதளம் கட்சி எம்.பி தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்து எதிர்ப்பு தெரிவித்தார்.

மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முழக்கம்: மியூட் செய்து ஒளிபரப்பிய ராஜ்ய சபா டிவி!

இவ்வாறு கடும் எதிர்ப்புகளுக்கிடையே மக்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேறியதை தொடர்ந்து, இன்று மீண்டும் மாநிலங்களவையில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை எதிர்த்து எதிர்க்கட்சியினர் அவையில் அமளியில் ஈடுபட்டும், குரல் வாக்கெடுப்பின் மூலமாக 2 மசோதக்கள் நிறைவேற்றப்பட்டது.இந்த நிலையில், எதிர்கட்சிகள் மசோதாக்களுக்கு எதிராக கடும் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்ய சபா டிவி சத்தமே இல்லாமல் மியூட் செய்து ஒளிபரப்பியிருக்கிறது.