ராஜ்ய சபா எம்.பி. சீட்டை நிராகரித்த நடிகர் சோனு சூட்

 

ராஜ்ய சபா எம்.பி. சீட்டை நிராகரித்த நடிகர் சோனு சூட்

சினிமாவில் வில்லனாக வலம் வரும் சோனு சூட், நிஜத்தில் ஹீரோவாக வலம் வருகிறார். மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து மக்களிடத்தில் பெரும் பெயரை அவர் சம்பாதித்து வைத்திருப்பதால் அவருக்கு ராஜ்யசபா எம்பி சீட் தேடி வந்திருக்கிறது. ஆனால் அவர் தனக்கு அரசியல் சாயம் வேண்டாம் என்று அதை நிராகரித்து இருக்கிறார்.

ராஜ்ய சபா எம்.பி. சீட்டை நிராகரித்த நடிகர் சோனு சூட்

பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட். இவர் தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இயல்பிலேயே மனிதநேயமுள்ள தன்னுடன் நடிக்கும் சக சினிமா தொழிலாளர்கள், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பல்வேறு கட்டங்களில் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார்.

ராஜ்ய சபா எம்.பி. சீட்டை நிராகரித்த நடிகர் சோனு சூட்

இவரது மனிதநேயத்தையும் அறிந்து கொண்டவர்கள் அவரிடம் உதவியை நாடி வர அவரும் தவறாமல் செய்து கொண்டிருக்கிறார். கொரோனா முதல் அலையின்போதுதான் இவர் செய்த உதவிகள் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது தான் இவர் உலகம் முழுவதும் பேசப்படும் நடிகரானார். ஊரடங்கினால் தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்தார்.

ராஜ்ய சபா எம்.பி. சீட்டை நிராகரித்த நடிகர் சோனு சூட்

வெளிநாட்டில் தவித்த இந்திய மருத்துவ மாணவர்களை தனது தீவிர முயற்சியால் இந்தியாவிற்கு அழைத்து வந்தார். தன்னிடம் ஏராளமான பணம் இருக்கிறது அதனால் தான் இப்படி செய்கிறார் என்று சொல்லி வந்தனர். ஆனால் தற்போது இவர் தனது சொத்துக்களை அடமானம் வைத்து 10 கோடி வாங்கி விட்டதாக தகவல் வெளியானது. பிறருக்கு உதவி செய்வதற்காகத் தான் அவரது சொத்துக்களை அடமானம் வைத்து கடன் வாங்கி இருக்கிறார் என்ற தகவல் அறிந்து அவரை மேலும் மக்கள் மன்னன் ஆக மாற்றியது. 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்பாடுகளும் செய்து கொடுத்திருக்கிறார். மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்திருக்கிறார்.

இவரை பல மாவட்டங்களில் கடவுளாகவே பாவித்து வணங்கி வருகிறார்கள். போட்டோவை பூஜை அறையில் வைத்து பல வீடுகளில் வணங்கி வருகின்றனர். அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் சோனு சூட்டுக்க்கு, ஒரு மாநில அரசு ராஜ்யசபா சீட்டு வழங்க முன் வந்திருக்கிறது. ஆனால் எந்த அரசியல் அமைப்பிலும் தான் சார்ந்து இருக்க விரும்பவில்லை . அரசியல் கட்சிகளின் சாயம் இல்லாமல் தொடர்ந்து எனவே நற்பணிகளை செய்ய விரும்புகிறேன் என்று சொல்லி அந்த ராஜ்யசபா சீட்டுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.