darbar
  • January
    27
    Monday

Main Area

Main



தமிழகத்தில் ஜூலை 18 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் 

Rajya sabha
Rajya sabha

தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  


தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் காலியாகும் மாநிலங்களை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடைபெற்ற அன்றைய தினமே முடிவுகளும் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல், அர்ஜூனன், டி. ராஜா மற்றும் கனிமொழி ஆகிய 6 பேரின் பதவிக்காலமே வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்வு செய்ய 34 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு தேவை. இதற்கான வேட்புமனுவை ஜூலை 1 முதல் 8 ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்படலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.