மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம்!

 

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம்!

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம்!

விவசாய மசோதாவால் நாடாளுமன்றமே தற்போது ஸ்தம்பிக்கத் தொடங்கியுள்ளது. விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இருக்கையை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் அமளியில் ஈடுபட்டதால் 8 எம்பிக்கள் ஒருவார காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் 8 எம்பிக்களும் தர்ணா போராட்டம் செய்து வரும் நிலையில் அவர்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் பருக தேநீர் கொண்டு வந்தார். ஆனால் அதை வாங்க எம்பிக்கள் மறுத்து விட்டனர்.

இந்நிலையில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடுக்கு ஹரிவன்ஷ் கடிதம் எழுதிய அவர் நாளை காலை வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் தன்னை அவமதித்து விட்டதாக ஹரிவன்ஷ் குற்றச்சாட்டியது கவனிக்கத்தக்கது.