தர்ணா செய்யும் 8 எம்.பிக்களுக்காக டீ கொண்டுவந்த மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்

 

தர்ணா செய்யும் 8 எம்.பிக்களுக்காக டீ கொண்டுவந்த மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்

2வது நாளாக தர்ணா செய்யும் 8 எம்.பிக்களுக்காக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் டீ கொண்டு வந்தார்.

மாநிலங்களவையில் கடந்த செப்.20 ஆம் தேதி விவசாய மசோதாவுக்கு எதிராக அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைத் துணைத்தலைவரின் ஹரிவன்ஷ் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் மாநிலங்களவையிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக்.ஓ.பிரையன், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உட்பட 8 எம்.பி.க்கள் ஒருவாரம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். இதை எதிர்த்து எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா செய்யும் 8 எம்.பிக்களுக்காக டீ கொண்டுவந்த மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்

இந்திய வரலாற்றில் நாடாளுமன்றத்தில் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு அங்கேயே படுத்து தூங்கியது என்பது இதுவே முதல் முறை.

இந்நிலையில் 2வது நாளாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்களும் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தேநீர் கொண்டு வந்தார். ஹரிவன்ஷ் கொடுத்த டீயை சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் வாங்க மறுத்ததுடன் இந்த போராட்டம் தனிநபருக்கு எதிரானது அல்ல, விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் என்று கூறினர். மாநிலங்களவை காலை 9 மணிக்கு கூடும் நிலையில் எம்பிக்கள் போராட்டம் நடத்துவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.