பெகாசஸால் வேவு பார்த்த அரசு? கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள் – ஒரே நாளில் இரு முறை ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபா!

பெகாசஸால் வேவு பார்த்த அரசு? கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள் – ஒரே நாளில் இரு முறை ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபா!

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் வேவு பார்த்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை கட்டியெழுப்பியிருக்கிறது. பெகாசஸ் என்பது இஸ்ரேலை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஸ்பைவேர் நிறுவனமான என்எஸ்ஓ உருவாக்கிய மென்பொருள். இது கணினி, ஸ்மார்ட்போன்களுக்குள் ஊடுருவி தகவல்களை திருடக்கூடிய திறன் கொண்டது. ஒருவரின் போனிலுள்ள மைக்ரோபோனை ஆக்டிவேட் செய்து அவர்கள் பேசுவதை ஒட்டு கேட்கக்கூடிய அளவிற்கு இந்த மென்பொருளால் அனைத்தையும் சாதிக்கலாம்.

பெகாசஸால் வேவு பார்த்த அரசு? கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள் – ஒரே நாளில் இரு முறை ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபா!

அரசின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள், உரிமைப் போராளிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் போன் கால்களை ஒட்டுக் கேட்கவும், அவர்களிடம் இருக்கும் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றவும் பயன்படுத்துகிறார்கள். என்எஸ்ஓ நிறுவனத்திற்கு பல்வேறு நாட்டு அரசுகள் தான் வாடிக்கையாளர்கள். விஷயம் இவ்வாறு இருக்க எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு போன் கால்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன.

பெகாசஸால் வேவு பார்த்த அரசு? கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள் – ஒரே நாளில் இரு முறை ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபா!

இது மத்திய அரசின் துணையில்லாமல் இதைச் செய்திருக்க முடியாது என எதிர்க்கட்சியினர் கொந்தளிக்கின்றனர். இதில் மத்திய அரசின் தலையீடு நிச்சயமாக இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கூட இது தொடர்பாக கேள்வியெழுப்பியிருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுதொடர்பாக விளக்கமளிக்க சுவாமி உள்பட பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

பெகாசஸால் வேவு பார்த்த அரசு? கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள் – ஒரே நாளில் இரு முறை ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபா!

இவ்விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வியெழுப்பினர். காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கிய உடனே எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவைத் தலைவர் 12 மணி வரை கூட்டத்தை ஒத்திவைத்தார். இதற்குப் பின் சிறிது நேரத்தில் மீண்டும் அவை கூடியது. ஆனால் அப்போதும் எதிர்க்கட்சியினர் விடாமல் கேள்வியெழுப்பி அமளியில் இறங்கினர். இதனையடுத்து 1 மணி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. ஒரே நாளில் இரு முறை ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.