• February
    29
    Saturday

Main Area

Main



ரஜினியின் தேரை இழுத்து தெருவில் விட்ட பாஜக..!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

மத்திய அரசையும், மாநில அரசையும் கைக்குள் வைத்துக் கொண்டு மிகவும் பவர்ஃபுல்லாக விளங்குகிறது வேதாந்தா நிறுவனம். இந்தியாவில் உள்ள மிக முக்கியமான ஆளுங்கட்சி எதிர்க்கட்சி சினிமா துறை தொழில் அதிபர்கள் என்று ஆக்டோபஸ் போல தன் கரங்களை விரித்து வைத்திருக்கிறது அந்த நிறுவனம். அதனால்தான் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசும், ரஜினியும் ஒரே கருத்தைச் சொன்னார்கள்.

ரஜினியின் ஆன்மீக அரசியலை தங்களது கட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்துகிறது பாஜக என்பது தெரிகிறது. இல்லையென்றால் ஒரு பத்திரிக்கை ஆண்டுவிழாவில் பெரியாரை வம்புக்கிழுத்து இருப்பாரா ரஜினி? ஆனால் அந்த விவகாரத்தில் தான் கொஞ்சம் அவசரப்பட்டு பேசி விட்டோமோ என்று பதற்றப்பட்ட ரஜினியை கூல் செய்த பாஜக தலைவர்கள் அவருக்கு தைரியமூட்டியதால் தான் ’’நான் பெரியாரை பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது’’ என்று முழக்கமிட்டு இருக்கிறார்.rajini

ஆனால் பேட்டியின் போது அவரது முகத்தில் தெம்பு இல்லை. எப்படியோ சுப்பிரமணிய சுவாமியும் ஆடிட்டர் குருமூர்த்தியின் ரஜினியின் தேரை இழுத்து தெருவில் விட்டு விட்டார்கள். நாளுக்கு நாள் அவரை எதிர்த்து ஊர்வலங்கள் நடக்கின்றன.

2018 TopTamilNews. All rights reserved.