இந்தியா-சீனா மோதல்.. நடந்தது என்ன? என்ன நடக்கிறது?…ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்ற வாய்ப்பு

இந்தியா-சீனா மோதல்.. நடந்தது என்ன? என்ன நடக்கிறது?…ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்ற வாய்ப்பு

கிழக்கு லடாக்கில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான இராணுவ நிலைப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில், கோவிட்-19, எல்லையில் சீன அத்துமீறல், வேலையின்மை, பொருளாதார வளர்ச்சி சரிவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று கொரோனா வைரஸ் நிர்வாகம் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை மற்றும் தற்போதுள்ள நிலவரம் உள்ளிட்ட விவரங்களை மக்களவையில் தெரிவித்தார்.

இந்தியா-சீனா மோதல்.. நடந்தது என்ன? என்ன நடக்கிறது?…ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்ற வாய்ப்பு
ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என தகவல் அறிந்த வட்டராங்கள் தெரிவித்தன. அப்போது எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் என்ன நடந்தது? என்ன நடக்கிறது? என்பது குறித்து நாடாளுமன்றத்தில் அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு லடாக்கின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் தொடரும் சீன ராணுவத்தின் அத்துமீறல், இந்திய-சீன ராணுவத்தின் நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக தெரிவிக்கும்படி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-சீனா மோதல்.. நடந்தது என்ன? என்ன நடக்கிறது?…ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்ற வாய்ப்பு
ஹரிவன்ஷ்

மாநிலங்களவையில் நேற்று துணை தலைவரை தேர்ந்தேடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. பா.ஜ.க. தலைமயிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஹரிவன்ஷ் நிறுத்தப்பட்டார். அதேசமயம் எதிர்க்கட்சிகள் சார்பில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மனோஜ் குமார் நிறுத்தப்பட்டார். இதனையடுத்து குரல் வாக்கெடுப்பு வாயிலாக மாநிலங்களவை துணை தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்பட்ட ஹரிவன்ஷ் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் தொடர்ந்து 2வது முறையாக மாநிலங்களவையின் துணை தலைவராகி உள்ளார்.