பாதுகாப்பு துறைக்கு 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு.. மோடி, நிர்மலாவுக்கு நன்றி சொன்ன ராஜ்நாத் சிங்

 

பாதுகாப்பு துறைக்கு 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு.. மோடி, நிர்மலாவுக்கு நன்றி சொன்ன ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு துறைக்கு 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததற்காக பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தார்.

ராணுவத்தை நவீனமயமாக்கும் நோக்கில், பல்வேறு நவீன ஆயுதங்களை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்து நம் நாடு வாங்கி வருகிறது. எனவே தற்போது பாதுகாப்பு துறைக்கான செலவினம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கான ஒதுக்கீட்டை மத்திய அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே எதிர்வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறைக்கு 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு.. மோடி, நிர்மலாவுக்கு நன்றி சொன்ன ராஜ்நாத் சிங்
இந்திய ராணுவம்

2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.4.78 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் (2020-21) பாதுகாப்பு துறைக்கு ரூ.4.71 லட்சம் கோடி (ராணுவ ஓய்வூதியம் உள்பட) ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஓய்வூதியத்தை தவிர்த்து பார்த்தால், 2021-22ம் நிதியாண்டுக்கு பாதுகாப்பு துறைக்கு ரூ.3.62 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 3.37 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆக, இந்த பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி அதிகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறைக்கு 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு.. மோடி, நிர்மலாவுக்கு நன்றி சொன்ன ராஜ்நாத் சிங்
பிரதமர் மோடி

பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துள்ளார். ராஜ்நாத் சிங் இது குறித்து கூறுகையில், 2021-22ம் நிதியாண்டுக்கு பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட்டை ரூ.4.78 லட்சம் கோடியாக உயர்த்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சருக்கு நான் சிறப்பு நன்றி கூறுகிறேன். பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.1.35 லட்சம் கோடி மூலதன செலவும் அடங்கும். இது பாதுகாப்பு மூலதன செலவில் சுமார் 19 சதவீதம் அதிகமாகும். இது 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்ச மூலதன செலவு என்று தெரிவித்தார்.