அதிமுக பாஜக கூட்டணி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்- ராஜ்நாத் சிங்

 

அதிமுக பாஜக கூட்டணி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்- ராஜ்நாத் சிங்

அதிமுக பாஜக கூட்டணி பெரும்பான்மையான பலத்துடன் சட்டப்பேரவைக்குள் நுழையும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் இளைஞர் அணி மாநில மாநாடு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்றது. இளைஞர் அணி மாநில தலைவர் பி.செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில தலைவர் எல்.முருகன், ஹெச். ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிமுக பாஜக கூட்டணி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்- ராஜ்நாத் சிங்

நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “திமுக மற்றும் காங்கிரஸ் ஊழல் செய்யும் கட்சிகளாகும். மாற்றத்திற்கான பாதையை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதிமுக பாஜக கூட்டணி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். பாஜக ஆட்சியின் மூலம் ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 3 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு தரப்படுள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கைகளால் அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும். விவசாயிகளின் முன்னேற்றத்திற்காகவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டப்பணிகள் 2021- 22இல் தொடங்கப்படும். இந்திய அளவிலான 2 ராணுவ தளவாட வழித்தடத்தில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது. கொரோனாவால் சுகாதாரம் மட்டுமல்ல, பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.