விவசாயின் மகனாக சொல்கிறேன், மோடி அரசு விவசாயிகளுக்கு எதிராக எதுவும் செய்யாது… ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயின் மகனாக சொல்கிறேன், மோடி அரசு விவசாயிகளுக்கு எதிராக எதுவும் செய்யாது… ராஜ்நாத் சிங் உறுதி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக எதுவும் செய்யாது என்பதை ஒரு விவசாயின் மகனாக தெளிவுப்படுத்த விரும்புகிறேன் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் பயங்கர எதிர்ப்பு நிலவும் சூழ்நிலையில், தங்களது பிரச்சினைகள் குறித்து அரசிடம் பேசுங்க என்று விவசாய அமைப்புகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஒரு விவசாயின் மகன் என்ற முறையில், விவசாயிகளின் நலனுக்கு எதிராக மோடி அரசு எதுவும் செய்யாது என்பதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

விவசாயின் மகனாக சொல்கிறேன், மோடி அரசு விவசாயிகளுக்கு எதிராக எதுவும் செய்யாது… ராஜ்நாத் சிங் உறுதி
பிரதமர் மோடி

பிரச்சினைகளை தெளிவுபடுத்துவதற்காக எங்களுடன் வந்து பேசுமாறு அனைத்து உழவர் அமைப்புகளிடமும நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நான் ஏற்கனவே இது போன்ற கூட்டங்களை தொடங்கிவிட்டேன். குறைந்தபட்ச ஆதரவு விலை தக்கவைக்கப்படுவது மட்டுமல்லாமல் அவ்வப்போது அதிகரிக்கப்படும். ஆயுதங்கள் ராணுவ வீரர்களுக்கு இருப்பது போல் டிராக்டர்கள் விவசாயிகளுக்கு புனிதமானவை. அவற்றை எரிப்பது விவசாயிகளை அவமதிப்பது போன்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விவசாயின் மகனாக சொல்கிறேன், மோடி அரசு விவசாயிகளுக்கு எதிராக எதுவும் செய்யாது… ராஜ்நாத் சிங் உறுதி
டிராக்டர் எரிக்கப்பட்ட சம்பவம்

மத்திய அரசு வேளாண் சட்டங்களை எப்படியேனும் அமல்படுத்த வேண்டும் என்று எண்ணத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் எதிர்க்கட்சியான காங்கிரசோ அதனை அமல்படுத்த விடாது என்பதில் உறுதியாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தவிர்க்க சட்டங்களை இயற்றுவது தொடர்பான சாத்தியக்கூறுகளை மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் முதல்வர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்தி அண்மையில் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.