சீனாவுடன் பேச்சுவார்த்தை தொடரும்… நாட்டின் சுயமரியாதை விவகாரத்தில் தலைமை சமரசம் செய்யாது….. ராஜ்நாத் சிங் உறுதி

சீனாவுடன் பேச்சுவார்த்தை தொடரும்… நாட்டின் சுயமரியாதை விவகாரத்தில் தலைமை சமரசம் செய்யாது….. ராஜ்நாத் சிங் உறுதி

வீடியோ கான்பரன்சிங் வாயிலாக மகாராஷ்டிராவில் நேற்ற நடைபெற்ற மகாராஷ்டிரா ஜன் சாம்வாத் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், பாதுகாப்பு துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நீண்ட காலமாக இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சினை நடந்து கொண்டு இருக்கிறது.

சீனாவுடன் பேச்சுவார்த்தை தொடரும்… நாட்டின் சுயமரியாதை விவகாரத்தில் தலைமை சமரசம் செய்யாது….. ராஜ்நாத் சிங் உறுதி

கடந்த 6ம் தேதி நடந்த பேச்சுவார்த்தைகள் மிகவும் பாசிட்டிவ்வாக இருந்தது மற்றும் இந்தியாவும், சீனாவும் தற்போது நடந்து கொண்டிருக்கும் சச்சரவுகளை தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் ஒப்புக்கொண்டன. நாட்டின் தலைமை வலுவான கரங்களில் உள்ளது மற்றும் நாட்டின் சுயமரியாதை விவகாரத்தில் நாங்கள் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என்று மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

சீனாவுடன் பேச்சுவார்த்தை தொடரும்… நாட்டின் சுயமரியாதை விவகாரத்தில் தலைமை சமரசம் செய்யாது….. ராஜ்நாத் சிங் உறுதி

இந்திய-சீன எல்லையில் என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என இன்று (நேற்று) ராகுல் காந்தி மற்றும் சில எதிர்க்கட்சி தலைவர்கள் கூறினர். நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் நான் என்ன சொல்ல வேண்டுமோ அதை நாடாளுமன்றத்தின் உள்ளே சொல்ல விரும்புகிறேன். நான் மக்களை தவறாக வழிநடத்த மாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.