வேளாண் மசோதாவால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்- அமைச்சர் ராஜ்நாத் சிங்

 

வேளாண் மசோதாவால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்- அமைச்சர் ராஜ்நாத் சிங்

நாடாளுமன்ற அமளி கவலை அளிக்கிறது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாயம் தொடர்பான மூன்று சட்ட மசோதாக்களுக்கு பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட
மாநிலங்களில் உள்ள விவசாயிகள் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

வேளாண் மசோதாவால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்- அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்றதில்லை. இன்று மாநிலங்களவையில் நடந்தது வேதனைக்குரியது, அவமானமானது. வேளாண் மசோதாவால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும். நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று விவசாயிகள் விலை பொருட்களை விற்க முடியும். வேளாண் மசோதா குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவலை பரப்புகின்றன. அவையில் ஒழுக்கத்தை கடைபிடிப்பது எதிர்கட்சிகளின் கடமை” எனக் கூறினார்.