லடாக் எல்லையில் பதற்றம்; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

 

லடாக் எல்லையில் பதற்றம்; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன படைவீரர்களின் இடையே கடந்த மே மாதம் திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த மோதலால் எல்லையில் பதற்றமான சூழல் அதிகரித்தைத்தொடர்ந்து, இரு நாட்டுப் படைகளும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டது. இந்த திடீர் தாக்குதலால் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து பதற்றம் நிலவும் லடாக் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி கடந்த 3 ஆம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

லடாக் எல்லையில் பதற்றம்; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

இந்நிலையில் இன்று மாலை லடாக் எல்லைப் பகுதியில் உள்ள ஏரியின் அருகே சீன ராணுவம் ஊடுருவ முயன்றதாகவும், அதை இந்திய ராணுவத்தினர் தடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் இருநாட்டு ராணுவமும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். டெல்லியில் உள்ள ராஜ்நாத் சிங் அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றுவருகிறது.