‘ஒரு இன்ச் நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்’ – ராஜ்நாத் சிங் அதிரடி!

 

‘ஒரு இன்ச் நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்’ – ராஜ்நாத் சிங் அதிரடி!

லடாக் எல்லை விவகாரத்தில் ஒரு அங்குல நிலத்தைக் கூட சீனாவிற்கு விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்திய – சீன எல்லையான லடாக்கில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் எல்லையில் சீன அத்துமீறிய போது, இந்திய- சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததும் 40க்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் உயிரிழந்ததுமே எல்லையில் பதற்றத்திற்கு வித்திட்டது. எல்லையில் அமைதியை நிலைநாட்ட விரும்பும் இந்தியா, சீன ராணுவத்திடம் 9 முறை பேச்சுவார்த்தயை நடத்தியிருக்கிறது. இருப்பினும் போடப்பட்ட அனைத்து உடன்படுக்கைகளையும் மீறி சீன ராணுவம் அத்துமீறிக் கொண்டே இருக்கிறது.

‘ஒரு இன்ச் நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்’ – ராஜ்நாத் சிங் அதிரடி!

இந்த நிலையில் லடாக் கிழக்குப் பகுதியின் தற்போதைய நிலவரம் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார். அப்போது, லடாக் எல்லையில் சீனா ஆக்கிரமித்துள்ளது. சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா ஒருபோதும் ஏற்கவில்லை. லடாக் எல்லை விவகாரத்தில் ஒரு இன்ச் நிலத்தை கூட யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என அதிரடியாக பேசினார்.

‘ஒரு இன்ச் நிலத்தை கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்’ – ராஜ்நாத் சிங் அதிரடி!

தொடர்ந்து, படைகளை குவித்து அச்சுறுத்திய சீனாவை சமாளித்து இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்ததாக கூறிய அவர், லடாக் எல்லையில் எத்தகைய சோதனை ஏற்பட்டாலும் அதை சந்திக்க தயார் என்றும் பதற்றத்தை தணிக்க 9 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன என்றும் கூறினார். மேலும், எல்லையில் பதற்றத்தை தணிக்க பாங்காங் ஏரி அருகே இருதரப்பும் படைகளை விலக முடிவு செய்திருப்பதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.