‘இந்தியாவுக்கு வாங்க’ இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரை அழைத்த ராஜ்நாத் சிங்

 

‘இந்தியாவுக்கு வாங்க’ இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரை அழைத்த ராஜ்நாத் சிங்

அண்டைநாடுகளுடன் சுமுகமான உறவை நீட்டிப்பதற்கும் நல்லிணக்கதை வலுப்படுத்தவும் இருநாட்டு அமைச்சர்கள் பேசிக்கொள்வது வழக்கம். அப்படியான ஓர் உரையாடல் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் லெப்டினென்ட் ஜெனரல் பெஞ்சமின் காண்ட்சூடனும்க்கு இடையே நடைபெற்றிருக்கிது.

இந்த உரையாடலில் இருநாட்டு உறாவு, கொரோனா மீட்பு நடவடிக்கைள் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இஸ்ரேலிய அமைச்சரை இந்தியாவிற்கு அழைத்திருக்கிறார் ராஜ்நாத் சிங்.

‘இந்தியாவுக்கு வாங்க’ இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரை அழைத்த ராஜ்நாத் சிங்

இது குறித்த அறிவிப்பில், ‘இரு நாடுகளுக்கும் இடையிலான போர்த்திறம் சார்ந்த ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து இரு அமைச்சர்களும் திருப்தி தெரிவித்தனர், அப்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதித்தனர்.

கோவிட்-19 தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தொடர்ந்து ஒத்துழைப்பதில் அவர்கள் திருப்தி தெரிவித்தனர், இது இரு நாடுகளுக்கும் பயனளிப்பது மட்டுமல்லாமல், மனிதாபிமான காரணங்களுக்கும் உதவும். மேலும், இந்தியாவில், பாதுகாப்பு உற்பத்தியில் புதிய தாராளமயமாக்கப்பட்ட அந்நிய நேரடி முதலீடு (FDI) திட்டத்தின் கீழ் இஸ்ரேலியப் பாதுகாப்பு நிறுவனங்களை அதிக முதலீடுகளைச் செய்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார். இரு அமைச்சர்களும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர் இந்தியாவுக்கு வருகை தருமாறு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்ததற்கு, இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் சாதகமாக பதிலளித்தார்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.