நாம் தமிழர் கட்சிக்குள் மோதல்; மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ராஜீவ் காந்தி விலகல்!

 

நாம் தமிழர் கட்சிக்குள் மோதல்; மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ராஜீவ் காந்தி விலகல்!

இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரம் ஜூனியர் விகடனில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரம் மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தி ஒன்று வெளியானது. அதனைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கல்யாணசுந்தரத்தை பற்றி தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார். மேலும் நாம் தமிழர் கட்சியில் இருந்து அவர் விலகியதாக பதிவிட்டுவந்தார். அதுகுறித்து கல்யாணசுந்தரம் கேட்டபோது அவர் கட்சியில் இருந்து விலகவில்லை. இது பொய்யான தகவல் என விளக்கமளித்திருந்தார்.

நாம் தமிழர் கட்சிக்குள் மோதல்; மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து ராஜீவ் காந்தி விலகல்!

ஆனால், ராஜீவ் காந்தி தற்போது வரை எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வந்த நிலையில் நேற்று ராவணன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ராஜீவ் காந்தி மற்றும் கல்யாண சுந்தரம் தொடர்ச்சியாக கட்சிக்காக வேலை செய்யாமல் கட்சிக்குள் தனக்காக மட்டுமே பணியாற்றி வந்ததாகவும், கட்சிக்கு எதிராகவும் எனக்கு எதிராகவும் பணியை செய்து வருவதாகவும், கட்சியின் பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட இருப்பதாகவும் சீமான் தெரிவித்திருந்தார். இதனால் இன்று ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கட்சியில் இருந்து விலகுவதாக பதிவிட்டுள்ளார்.