ராஜீவ் கொலை விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா? – நீதிமன்றம் கேள்வி

 

ராஜீவ் கொலை விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா? – நீதிமன்றம் கேள்வி

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட பன்நோக்கு விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று தற்போது விடுதலைக்காக நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் பேரறிவாளனுக்கு 90 நாள் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அப்போது தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியிருந்தனர்.

ராஜீவ் கொலை விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா? – நீதிமன்றம் கேள்வி
முடிவெடுக்க காலக்கெடு எதுவும் இல்லை என்பதையே ஒரு காரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று ஆளுநரின் தாமதம் பற்றி நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இதற்கு தமிழக ஆளுநரின் துணை செயலாளர் நீதிமன்றத்தில் பதில் அளித்திருந்தார். அதில், ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானம் தொடர்பான முடிவெடுக்க மத்திய அரசு அமைத்த பல்நோக்கு விசாரணை முகமையின் இறுதி அறிக்கைக்காக ஆளுநர் காத்திருக்கிறார் என்று கூறப்பட்டு இருந்தது.

ராஜீவ் கொலை விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா? – நீதிமன்றம் கேள்வி
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமை தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்று தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஏற்கனவே பரோல் வழங்கப்பட்டதற்கான அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை அற்புதம்மாள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.