’எந்தக் கட்சிக்கும் செல்லும் எண்ணம் இல்லை’ வழக்கறிஞர் ராஜிவ் காந்தி

 

’எந்தக் கட்சிக்கும் செல்லும் எண்ணம் இல்லை’ வழக்கறிஞர் ராஜிவ் காந்தி

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் மாநிலப் பொறுப்புகளில் இருந்தவர்கள் ராஜிவ் காந்தி மற்றும் கல்யாண சுந்தரம். இவர்கள் இருவரும் கட்சி தொடங்கிய காலம் தொடங்கிய காலம் முதலே சீமானுடன் இருந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டவர்கள்.

சில மாதங்களுக்கு முன், கல்யாண சுந்தரம் மற்றும் ராஜீவ் காந்தி இருவரும் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார்கள். இருவரும் தனி இயக்கம் ஆரம்பிப்பார்கள் என்றும், வேறு கட்சியில் சேர்வார்கள் என்றும் பலவிதமாகக் கூறப்பட்டது.

’எந்தக் கட்சிக்கும் செல்லும் எண்ணம் இல்லை’ வழக்கறிஞர் ராஜிவ் காந்தி

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் கல்யாண சுந்தரம் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது அவர் “உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்து கலந்து பேசி முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளேன். நாம் தமிழர் கட்சியில் எங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளால் அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. மக்கள் நலன் பேணும் கட்சியில் இணைய வேண்டும் என்பதால் தான் அதிமுகவில் இணைந்துள்ளோம். சாதிய, மதவாத சிந்தனையற்ற அனைத்து மக்களுக்கான இயக்கம் என்பதால் அதிமுகவில் இணைந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

’எந்தக் கட்சிக்கும் செல்லும் எண்ணம் இல்லை’ வழக்கறிஞர் ராஜிவ் காந்தி

அடுத்து ராஜிவ் காந்தி ஏதேனும் ஒரு கட்சியில் சேர்வார் என்று பேசப்பட்டது. அதற்கு பதில் சொல்லும் விதத்தில் ராஜிவ் காந்தி இன்று ஒரு ட்விட் போட்டிருக்கிறார். அதில், “தற்போது, எந்தக் கட்சிக்கும் செல்கிற எண்ணமில்லை. புது இயக்கம் துவங்குகிற திட்டமும் இல்லை. தமிழ்தேசிய எண்ணம் கொண்ட, சமூக நீதி பேசும் வழக்கறிஞராக, தேசிய இனங்களின் அரசியல் உரிமை களத்தில் மக்கள் நல அரசு அமைக்கும் பெருங்கனவோடு எனது குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.