‘ராஜீவ் காந்தியின் 29-வது நினைவு தினம்’..அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டதால் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதம்!

‘ராஜீவ் காந்தியின் 29-வது நினைவு தினம்’..அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டதால் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதம்!

கடந்த 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து மேலும் 14 பேர் அந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். அதில் அடையாளம் தெரியாத அளவிற்கு துண்டு துண்டாக ஆன முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சடலத்தை நம் நாட்டின் தேசியக் கொடியில் மூட்டைக் கட்டி கொண்டு செல்லப்பட்ட கருப்பு தினம் இன்று. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு, கிட்டத்தட்ட 27 ஆண்டுக்கு மேலாக சிறையில் இருந்து வருகின்றனர்.

‘ராஜீவ் காந்தியின் 29-வது நினைவு தினம்’..அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டதால் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்குவாதம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த திரண்டுள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அஞ்சலி செலுத்த மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் அங்கு இன்று காலை பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.