“ரஜினியின் குரலே போதும்; மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்வோம்” – கமல் ஹாசன்

“ரஜினியின் குரலே போதும்;  மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்வோம்” – கமல் ஹாசன்

ரஜினியிடம் ஆதரவு கேட்டீர்களா என்ற கேள்விக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் பதிலளித்துள்ளார்.

“ரஜினியின் குரலே போதும்;  மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்வோம்” – கமல் ஹாசன்

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரப்புரையை மேற்கொண்டார். சிவகங்கை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கமல் பரப்புரை மேற்கொண்ட கமல் ஹாசன் , மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால், இல்லத்தரசிகளுக்கு ஊதியம், வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் வரவேற்போம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார். ஒருபுறம் தேர்தல் பிரச்சாரம், பிக் பாஸ் நிகழ்ச்சி என பிசியாக இருந்த கமல், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததும், வலது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். பரப்புரையின் போது நீண்ட பயணம் காரணமாக காலில் வலி ஏற்பட்டதால் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதை தொடர்ந்து அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

“ரஜினியின் குரலே போதும்;  மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்வோம்” – கமல் ஹாசன்

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் இன்று காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினியிடம் ஆதரவு கேட்டீர்களா என கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ரஜினி ரசிகர்கள் எந்தக் கட்சியிலும் சேரலாம் என்ற ரஜினியின் குரலே போதும், மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்றார்.