ரஜினியின் பாணி ஆன்மிக அரசியலா…. இந்து ஆன்மிக அரசியலா?

 

ரஜினியின் பாணி ஆன்மிக அரசியலா…. இந்து ஆன்மிக அரசியலா?

’ரஜினிகாந்த் இந்து அல்லாத மதத்தைச் சேர்ந்தவராக நடித்த படம் ஒன்றின் பெயர் சொல்லுங்க?’

நீங்கள் சட்டென்று சொல்வது பாட்ஷாவைத்தான். ஆனால், பாட்ஷாவில் அவர் மாணிக்கம். நண்பரின் பெயரான பாட்ஷா என்று வைத்துக்கொள்வார். மேலும், மும்பையில் ரவுடி, குண்டு வைப்பதற்கு இஸ்லாமிய பெயரைச் சூட்டும் பழக்கம் பாலிவுட் தொடங்கி, இந்திய சினிமா முழுக்கவே இருக்கிறது.

ரஜினியின் பாணி ஆன்மிக அரசியலா…. இந்து ஆன்மிக அரசியலா?

அதற்கு முன் என்றால், 1978 ஆம் ஆண்டில் வெளியான சங்கர், சலீம், சைமன் படத்தில் சைமன், ஜானியில் ஜானி என கிறிஸ்துவ கேரக்டர்களில் நடித்திருப்பார். இன்னும் ஓரிரு படங்கள் இருக்கலாம்.

ஆனால், அவர் இந்து பெயரை மட்டுமல்ல, இந்து மத நம்பிக்கைகளைக் கொண்டாடும், தம் ரசிகர்களைப் பின்பற்ற வைக்கும் விதமான காட்சிகளைக் கொண்ட படங்கள் ஏராளம். ரஜினியின் 100-வது படமே ராகவேந்திரா தானே. அதன்பின், அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா, லிங்கா, குசேலன், பாபா என நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் தெளிவாகச் சொன்னால், படத்தின் தலைப்பு ரஜினியின் சாய்ஸ் என வந்த காலம் பிறகு இந்தப் பெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.

ரஜினியின் பாணி ஆன்மிக அரசியலா…. இந்து ஆன்மிக அரசியலா?

இந்தப் பின்புலத்திலிருந்து நாம் ரஜினி சொல்லும் ஆன்மிக அரசியலுக்கு வருவோம். 2017 ஆம் ஆண்டு டிசம்பரில்தான் ரஜினி ஆன்மிக அரசியல் என்பதை முதன்முதலாகப் பயன்படுத்துகிறார். அவரின் ஆன்மிக அரசியல் அனைத்து மதத்தினராக இருக்கும் என்றே அவர் சார்பில் தொலைக்காட்சிகளில் பேச வருபவர்கள் தவறாமல் சொல்கிறார்கள்.

ரஜினியிடம் ஆன்மிக அரசியல் குறித்த விளக்கம் கேட்டபோதும், ”நேர்மையான, நாணயம் மிக்க, சாதி, மதம் சார்பில்லாத உண்மையான அரசியலே ஆன்மிக அரசியல்” என்று விளக்கம் தந்துள்ளார்.

ரஜினியின் பாணி ஆன்மிக அரசியலா…. இந்து ஆன்மிக அரசியலா?

ஆனால், ரஜினி வெளிப்படுத்தும் போட்டோக்கள், குறியீடுகள் உள்ளிட்டவை அவரின் ஆன்மிக அரசியல் இந்து மத அரசியலாகத்தான் இருக்கும் என்று தெரிவிக்கின்றன. சாதி மதம் பேதமில்லாமல் எனச் சொல்லுகிற ரஜினியின் போட்டோக்களின் பின்புலத்தின் இந்து மதத்தைச் சார்ந்த பாபாவின் முத்திரைதான் இருக்கிறது.

அவரது கட்சி தொடர்பின் அறிவிப்பின்போது சென்னை ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்று அங்குள்ள முக்கியமானவர்களைச் சந்தித்து பேசினார். இது வழக்கமாக அவர் ஆசி வாங்கச் செல்வதுதான் என்று சொல்லப்பட்டது. ஆனால், ரஜினி மன்றத்திற்கான முத்திரை அதாவது லோகோ வெளியானபோது அதில் ராமகிருஷ்ண மடத்தின் லோகோவின் சில விஷயங்கள் இருந்தன.

ரஜினியின் பாணி ஆன்மிக அரசியலா…. இந்து ஆன்மிக அரசியலா?

இந்து மத அரசியலை முன்னிருத்தும் பாரதிய ஜனதா கட்சியுடன் மிகுந்த நெருக்கமாகத் தன்னைக் காட்டிக்கொள்வார் ரஜினி. 2014 ஆம் ஆண்டு மோடியே ரஜினியின் வீட்டுக்குச் சென்றார். 2019 மோடி இரண்டாம் முறையாக பிரதமராகப் பதவியேற்றபோது ரஜினி அவ்விழாவுக்குச் சென்றார்.

பண மதிப்பு இழப்பு உள்ளிட்ட மோடியின் பல திட்டங்களை வரவேற்று பேசியிருக்கிறார். விமர்சனமாக எதையுமே சொன்னது இல்லை. 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜக தமிழகத்தில் தோற்றது பற்றி அவர் சொன்ன கருத்து, மோடியை பற்றி நெகட்டிவாகச் சொல்வதுபோல இருந்ததும், அடுத்த நாளே பத்திரிகையாளர்களைச் சந்தித்து மறுப்பு தெரிவித்தார்.

ரஜினியின் பாணி ஆன்மிக அரசியலா…. இந்து ஆன்மிக அரசியலா?

இந்து முன்னணி கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் ஒரு பேட்டியில், ‘திராவிட கருத்தியலுக்கு எம்.ஜி.ஆரை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப்பட்டாரோ, அதேபோல இந்துத்துவ ஆன்மிக கருத்தியலுக்கு ரஜினியை நாங்கள் பயன்படுத்திக்கொள்வோம்’ என்றார். இதை ரஜினி தரப்பில் மறுக்கவில்லை.

இன்றும் ரஜினி தம் மன்ற மாவட்டச் செயலாளர்களைச் சந்திக்கும் நாளை முடிவெடுத்ததும் பாபாவின் பிறந்த நாள் என்றே கூறப்படுகிறது. இப்படிப் பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இதுவரையிலான அவரின் செயல்பாடுகள், அவர் முன்மொழியின் ஆன்மிக அரசியலுக்கு இந்து மத சாயலைத் தருகின்றன. இனிமேல், அதை மாற்றும் விதத்தில் அனைத்து மதத்தினரை உள்ளடக்கும் செயற்பாடுகளைச் செய்யக்கூடும். அப்படிச் செய்யும்பட்சத்தில் அனைத்து மதத்திற்கான ஆன்மிக அரசியலாக அது அமையும்.