ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

 

ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி துவங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், ரஜினி மக்கள் மன்ற ஒன்றிய செயலாளர் கோபிநாத் தலைமையில் ஏராளமானோர் பட்டாசுகளை வெடித்தும், பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் ஆன்மீக அரசியல் தலைவர் என்றும், வருங்கால முதல்வர் ரஜினிகாந்த் என கோஷங்களை எழுப்பிய அவர்கள், தேர்தலில் ரஜினிக்கு ஆதரவளிக்குமாறு மக்களை கேட்டுகொண்டனர்.

ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

தஞ்சையில் ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ரஜினிகணேசன் தலைமையில் திரண்ட 30-க்கும் மேற்பட்ட ரசிகர்கள், காந்திசாலையில் இருந்து ஊர்வலமாக சென்று அண்ணாசிலை முன்பு ரஜினியை வாழ்த்தி முழக்கமிட்டனர். அத்துடன், பட்டாசுகளை வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

தேனி நரில் உள்ள நேரு சிலை முன்பு, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒச்சாத்தேவர் தலைமையில் திரண்ட 20-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், ரஜினி மன்ற கொடிகளை கைகளில் ஏந்தி, தமிழகத்தின் நாளைய முதல்வர் ரஜினிகாந்த் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

ரஜினி அரசியல் கட்சி அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு கொட்டும் மழையில் பட்டாசு வைத்து உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் மேலும், அப்பகுதியில் வந்த வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கிய ரசிகர்கள், ரஜினியின் புகைப்படத்தை வைத்து ரஜினி முதல்வர் வாழ்க என்ற கோசத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்