• February
    28
    Friday

Main Area

Main



ரஜினியின் சர்ச்சை பேச்சால் கொளுந்துவிட்டு எரியும் தமிழகம்! 1971 ஆம் ஆண்டு அப்படி என்னதான் நடந்தது?

thulak photo
thulak photo

ராமர் படத்தை பெரியார் அவமதித்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் குறிப்பிட்ட 1971ஆம் ஆண்டு பேரணியில் என்ன நடந்தது? என்ற 50 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறை திருப்பி பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கோம். 

சினிமா துறைக்கு வருவதற்கு முன் சிவாஜி ராவ் கேக்வாடாக (SIVAJI RAO GAEKWAD) நடிகர் ரஜினிகாந்த் இருந்த காலகட்டம் அது. 1971... ஆம், நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டதைப் போல் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி சேலத்தில் அந்த ஆண்டு தான் நடைபெற்றது. அந்த பேரணியில் மூடநம்பிக்கையை ஒழிக்க தேவையான படங்கள், பதாகைகளுடன் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. அப்போது பெரியாருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற சிலர், பெரியார் மீது செருப்பை வீச முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், பெரியார் நடத்திய பேரணிக்கு எதிராக தாங்கள் முழக்கத்தின் மூலமே எதிர்ப்பு தெரிவித்தாகவும், செருப்பு வீசவில்லை என்றும் மறுக்கிறார் அப்போதைய போராட்டத்தில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் கே.என்.லட்சுமணன். 

dulk

துக்ளக் பத்திரிகையின் ஆரம்பக் காலக்கட்டம் என்பதால், அந்த சம்பவத்தை துக்ளக் பிரம்மாண்டமாக கையாண்டதாக கூறப்படுகிறது.  ராமர் படத்தை அவமதித்ததாக நீதிமன்றம் வரை சென்ற அந்த விவகாரத்தில், பெரியாருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்ததாக  கே.என். லட்சுமணன் கூறுகிறார்.  50 ஆண்டுகளுக்கு முன் பெரியார் நடத்திய பேரணி பல தருணங்களில் பேசப்பட்டு வந்த போதிலும், நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் நிகழ்ச்சியில் பேசியதால், தற்போது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

துக்ளக் விழாவில் ரஜினி பேசுகையில் 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணியில் ராமர், சீதையின் சிலைகள் உடையில்லாமல் செருப்பு மாலை அணிவித்து கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

2018 TopTamilNews. All rights reserved.