“ரஜினிக்கு கிடைத்துள்ள விருது தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது” : மு.க.ஸ்டாலின் ட்வீட்!

 

“ரஜினிக்கு கிடைத்துள்ள விருது தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது”  : மு.க.ஸ்டாலின் ட்வீட்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைத்துறையின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த்க்கு கிடைத்திருப்பதற்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, நடிகர் கமல் ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“ரஜினிக்கு கிடைத்துள்ள விருது தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது”  : மு.க.ஸ்டாலின் ட்வீட்!

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “இனிய நண்பரும், தன்னிகரற்ற கலைஞனுமாகிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, #DadasahebPhalkeAward கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். தாமதம் என்றாலும் வரவேற்புக்குரியது! நடிப்புக்கும், நட்புக்கும் இலக்கணமான நண்பர் ரஜினி அவர்களின் கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடர வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாமகவின் அன்புமணி ராமதாஸ், “இந்தியாவில் திரைத்துறையின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விருது பெற்ற இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக இந்த விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டிருப்பது தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் அமமுக பொதுச்செயலாளர் தினகரன், “திரைத்துறையினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் உயரிய விருதான “தாதா சாகேப் பால்கே” விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரையுலகிற்கு மிகச் சிறந்த பங்களிப்பை ரஜினிகாந்த் வழங்கி வருவதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. தாதா சாகேப் பால்கே விருது மட்டுமின்றி மென்மேலும் பல சிகரங்களைத் தொட நண்பர் ரஜினிகாந்த்தை இத்தருணத்தில் வாழ்த்துகிறேன்!” என்று கூறியுள்ளார்