ரஜினியின் பிரச்சாரம் எப்போது? வெளியான புது தகவல்

 

ரஜினியின் பிரச்சாரம் எப்போது? வெளியான புது தகவல்

பொங்கலுக்கு பிறகு ரஜினிகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டில் இருந்து அரசியலில் களமிறங்கவிருப்பதாக கூறி வந்த ரஜினிகாந்த், புதிய கட்சி தொடங்கவிருப்பதாகவும் டிச.31ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அண்ணாத்த படத்தில் சூட்டிங் முடிந்த உடன் கட்சிப் பணியில் இறங்குவேன் என்றும் கூறியிருந்தார். மேலும், பாஜகவின் அறிவுசார் தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தியை தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமித்தார்.

ரஜினியின் பிரச்சாரம் எப்போது? வெளியான புது தகவல்

வரும் 31 ஆம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட இருப்பதால் 29 ஆம் தேதியே ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார். அதற்கு அடுத்த நாள் 30 ஆம் தேதி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து கட்சி தொடர்பான அறிவிப்பை 31 ஆம் தேதி வெளியிடவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தியும் மேற்பார்வையாளர் தமிழருவி மணியனும் செய்துவருகின்றனர்.

ரஜினியின் பிரச்சாரம் எப்போது? வெளியான புது தகவல்

இதனையடுத்து ஒன்றாம் தேதி மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் ஐதரபாத் செல்கிறார். இதனையடுத்து பொங்கலுக்கு பிறகு ரஜினிகாந்த் பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்கவிருக்கிறார். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் குட்டி விமானத்திலோ அல்லது ஹெலிகாப்டரிலோ ரஜினிகாந்த் மாவட்டம் வாரியாக பிரச்சாரம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்களை நடத்தி அதில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து மக்களிடம் வாக்கு கேட்க ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார். இதனிடையே திருச்சி அல்லது மதுரையில் பிரமாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.