• December
    05
    Thursday

Main Area

Main



தெய்வ பக்தியுடன் நட்சத்திர பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்! 

Rajinikanth
Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  வரும் 12 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று அவருக்கு நட்சத்திர பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டில் சில ஹோமங்களும் பூஜைகளும் நடத்தப்பட்டு தெய்வ பக்தியுடன் ரஜினியின்70 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. 

rajinikanth

இதைத்தொடர்ந்து ரஜினியின் குடும்ப உறுப்பினர்கள், லதா மற்றும் ரஜினியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.  

கர்நாடகாவில் உள்ள ஒரு மராட்டிய குடும்பத்தில் பிறந்த ரஜினியின் இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். அவரது பெற்றோர்கள் , ஜிஜாபாய் மற்றும் ரமோஜிராவ் கெய்க்வாட் , தந்தை  போலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றினார்.  அவர் எட்டு வயதில் தனது தாயை இழந்தார். பெங்களூரில் கல்வி பயின்ற ரஜினிகாந்த், பல்வேறு இடங்களில் பணிபுரிந்து, அவ்வப்போது மேடை நாடகங்களிலும் நடித்துவந்தார். 

1975 ஆம் ஆண்டு முதன்முதலில் தமிழ் திரையுலகில் காலடி எடுத்துவைத்த ரஜினி,  அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் புற்றுநோயாளியாக நடித்தார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து திரைக்கதை ஆசிரியராகவும் , படத்தின் தயாரிப்பாளர் மற்றும் பின்னணி பாடகராகவும் பணியாற்றி வந்தார். உயரிய விருதான பத்ம பூஷண் விருதுக்கு சொந்தக்காரரான ரஜினி இதுவரை 190 படங்களில் நடித்துள்ளார். ஆனால் தனது தாய்மொழியான மராட்டியத்தில், இன்னும் ஒரு படம் கூட நடிக்கவில்லை என்று குறிப்பிடதக்கது. 
 

2018 TopTamilNews. All rights reserved.