ராஜ்கமல் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 169 ஆவது படம்? அட இவர் தான் இயக்குநராம்…

 

ராஜ்கமல் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 169 ஆவது படம்? அட இவர் தான் இயக்குநராம்…

நடிகர் ரஜினிகாந்தின் 169 ஆவது படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டதட்ட உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

rajini-kamal.jpg1

கடந்த டிசம்பர் மாதம் இதுகுறித்து இருதரப்பிலும் பேசப்பட்டது. ஆனால் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் அந்த படம் முடியும் தருவாயில் அடுத்த படம் குறித்த பேச்சுவார்த்தைகளை தொடரலாம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ராஜ்கமல் நிறுவனம் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன இந்த பேச்சுவார்த்தையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பங்கேற்றிருக்கிறார். இதனால், நடிகர் ரஜினிகாந்தின் 169 ஆவது திரைப்படத்தை ராஜ்கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்தசில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் கமல் நடிப்பது சந்தேகம் தான் எனக்கூறப்படுகிறது.