துரைமுருகனுக்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

 

துரைமுருகனுக்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

திமுகவின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவியும் தற்போது காலியாக இருக்கிறது. அந்த பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய வரும் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், அந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் இன்று வேட்பு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

துரைமுருகனுக்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்

அதன் படி இன்று அண்ணா அறிவாலயத்தில் பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலுவும், பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் ஆர்.எஸ் பாரதியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அந்த 2 பதவிகளுக்கும் இவர்கள் தான் போட்டியிடுவார்கள் என கூறப்பட்டு வந்தது. அதன் படியே, இவர்களை எதிர்த்து திமுக பதவிகளுக்கு யாரும் போட்டியிடாத நிலையில், வேட்பு மனுதாக்கல் செய்யும் நேரமும் 4 மணியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் பொருளாளர் பதவிக்கு டிஆர் பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.” என பதிவிட்டுள்ளார்.