“தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்து விட்டது” – ரஜினிகாந்த் பேட்டி!

“தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்து விட்டது” – ரஜினிகாந்த் பேட்டி!

கடந்த 2017ம் ஆண்டில் இருந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பது புரியாத புதிராகவே இருந்து வந்த நிலையில், ஜனவரியில் தான் கட்சி தொடங்குவதாக ரஜினி சற்று முன்னர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார். #இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல, #மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என்ற ஹேஸ்டேக்குகளுடன் இந்த அறிவிப்பை வெளியிட்ட ரஜினி, ஊழல் இல்லாத ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என அறிவித்தார்.

“தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்து விட்டது” – ரஜினிகாந்த் பேட்டி!

ரஜினியின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள், இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில், ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2017 டிசம்பர் 31இல் அரசியலுக்கு வருவது உறுதி என கூறியிருந்தேன். கொடுத்த வாக்கிலிருந்து என்றுமே தவற மாட்டேன். கொரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. நான் வெற்றி அடைந்தால் அது மக்களின் வெற்றி, தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வி. தமிழக மக்களுக்காக எனது உயிரே போனாலும் சந்தோஷம்தான். ஆட்சி மாற்றம் நடக்கும் அரசியல் மாற்றம் நடக்கும்” என தெரிவித்தார்.

“தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்து விட்டது” – ரஜினிகாந்த் பேட்டி!

மேலும் நான் ஒரு சின்ன கருவிதான், மக்கள் நீங்கள் தான் எல்லாமே எனக் கூறிய ரஜினிகாந்த், தமிழருவி மணியனை கட்சியின் மேற்பார்வையாளராகவும் அர்ஜுன மூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்திருப்பதாகவும் அறிவித்தார்.