மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினிகாந்த்

 

மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினிகாந்த்

உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினிகாந்த்

கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடிகர் ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதையடுத்து அவர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்கு சென்று உடலை பரிசோதித்துக் கொள்வது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அவர் அமெரிக்காவுக்கு செல்லவில்லை . இதையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்துக்கு கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் ரஜினிக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டா. ர் இதையடுத்து அவர் உடல் நலம் தேறி சென்னை திரும்பினார். ரஜினி உடல் நலம் கருதியே அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் அறிவித்தார்.இதனால் மருத்துவ பரிசோதனைக்காக இந்த ஆண்டு அமெரிக்கா செல்வதை உறுதிப்படுத்திக் கொண்ட ரஜினி அதற்கான அனுமதியை மத்திய அரசிடமிருந்து பெற்றார் மத்திய அரசு.

மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினிகாந்த்

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தனது உடல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு இன்று புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 3 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் ரஜினி புறப்பட்டு சென்றார் . அங்கிருந்து அவர் வேறு விமானம் மூலமாக அமெரிக்கா செல்வதாக தெரிகிறது. நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் மூன்று வாரம் தங்கி இருந்து தனது உடல்நிலையை பரிசோதனை செய்து கொள்கிறார். அமெரிக்காவில் இரண்டாவது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த ரஜினி பரிசோதனை செய்து கொள்கிறார்.