darbar
  • January
    26
    Sunday

Main Area

Main



களைகட்டும் சூப்பர் ஸ்டார் வீட்டு திருமணம்: திருமா, திருநாவுக்கரசருக்கு நேரில் அழைப்பு!

rajini
rajini

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், மகள் சௌந்தர்யாவின் திருமண அழைப்பிதழை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோருக்கு வழங்கினார்.

 

soudarya

நடிகர் ரஜினிகாந்த தனது மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்காக அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழை  வழங்கி வருகிறார். அதன்படி, சென்னை அண்ணாநகரில் உள்ள திருநாவுக்கரசரின் வீட்டிற்கு இன்று அழைப்பிதழ்  வைக்க சென்றுள்ளார். அந்த சமயத்தில் தங்கள் கட்சி மாநாட்டில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவிப்பதற்காக விசிக தலைவர் திருமாளவன் அங்கு வந்துள்ளார். இதையடுத்து மூன்று பேரும் நலம் விசாரித்துக்கொண்டனர். 

soundraya

இதை தொடர்ந்து திருநாவுக்கரசர், திருமாவளவன் இருவருக்கும் அழைப்பிதழ் வைத்த ரஜினிகாந்த் அங்கிருந்து கிளம்பியுள்ளார். இந்த சந்திப்பு எதிர்பாராத விதமாக அமைந்ததாக கூறப்படுகிறது. வரும் 11ஆம் தேதி எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல  நட்சத்திர விடுதியில் நடைபெறும் இந்த திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 

2018 TopTamilNews. All rights reserved.