உதவி கேட்டு ரஜினி இல்லத்திற்கு வெளியே காத்திருந்த மாற்றுத்திறனாளிக்கு கிடைத்த ரஜினி.

 

உதவி கேட்டு ரஜினி இல்லத்திற்கு வெளியே காத்திருந்த மாற்றுத்திறனாளிக்கு கிடைத்த ரஜினி.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு எப்போது வரும் என அவரது வாயில் கதவை நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திருச்சியை சேர்ந்த மாற்று திறனாளியான கெளரி, காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். பொதுமுடக்கத்தால் அண்மைக்காலமாக வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுவந்தார். அவரது கணவரும் ஆஸ்துமா நோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவராலும் வேலைக்கு எங்கும் செல்ல முடியவில்லை. இவர்களுக்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனர். மூன்று சக்கர வாகனம் இல்லாததால் கெளரியால் வேலைக்கு செல்ல முடியவில்லை.

உதவி கேட்டு ரஜினி இல்லத்திற்கு வெளியே காத்திருந்த மாற்றுத்திறனாளிக்கு கிடைத்த ரஜினி.

இதனால் குழந்தைகளை படிக்க வைக்க முடியாமலும், கணவருக்கு மருந்து வாங்க முடியாமலும் கெளரி கஷ்டபட்டுவந்தார். அதனால் ரஜினியை சந்தித்து உதவிக்கேட்க நினைத்து போயஸ் கார்டன் முன்பு நின்றுகொண்டிருந்தார். இந்த செய்தி ரஜினி காதுக்கு செல்ல உடனடியாக தனது ரஜினி பாலுவிடம் சொல்லி மூன்று சக்கர வாகனமும், கெளரியின் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பு மூலம் படிக்க செல்போனும் வாங்கிக்கொடுக்க கூறியுள்ளார். அதனால் அவரும் கெளரிவுக்கு உதவி செய்துள்ளார். உதவி கிடைத்த மகிழ்ச்சியில் கெளரி சந்தோஷத்துடன் திருச்சி திரும்பினார்.