ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்? முழு ஓய்வெடுக்க மருத்துவமனை அறிவுறுத்தல்!

 

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்? முழு ஓய்வெடுக்க மருத்துவமனை அறிவுறுத்தல்!

நடிகர் ரஜினியை எப்போது டிஸ்சார்ஜ் செய்வது என்பது பற்றி இன்று மாலை முடிவு எடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்? முழு ஓய்வெடுக்க மருத்துவமனை அறிவுறுத்தல்!

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் ரஜினியின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரஜினியின் ரத்த அழுத்தத்தில் நேற்றை விட முன்னேற்றம் இருந்தாலும் ரத்த அழுத்தம் சற்று அதிகமாகவே உள்ளது. ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்? முழு ஓய்வெடுக்க மருத்துவமனை அறிவுறுத்தல்!

ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஓய்வு தேவை என்பதால் அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை.மருத்துவ பரிசோதனைகளில் கவலைப் படும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை. ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது என இன்று மாலை முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்? முழு ஓய்வெடுக்க மருத்துவமனை அறிவுறுத்தல்!

ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு டிசம்பர் 14 ஆம் தேதி மீண்டும் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட நிலையில் அங்கு 4 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ரஜினிக்கு கொரோனா இல்லை என முடிவு வந்தாலும் அவர் ஐதராபாத்தில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதையடுத்து நேற்று நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.