ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ்? மருத்துவமனை அறிக்கை

 

ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ்? மருத்துவமனை அறிக்கை

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட சில பரிசோதனைகளின் முடிவுகள் வெளிவந்துள்ளன. பரிசோதனை முடிவுகளில் அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை. இன்னும் சில பரிசோதனை முடிவுகள் வெளிவரவில்லை. அதற்காக காத்திருக்கிறோம். மீதமுள்ள பரிசோதனை முடிவுகள் மற்றும் அவரது இரத்த அழுத்த நிலையில் அடிப்படையில், அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படுவது குறித்து நாளை காலை முடிவு செய்யப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

ரஜினிகாந்த் எப்போது டிஸ்சார்ஜ்? மருத்துவமனை அறிக்கை

முன்னதாக ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினி, படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று உறூதியானதால், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். நேற்று காலையில் அவருக்கு உடல் சோர்வு அதிகமாக இருந்ததால் ஐதரபாத் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரஜினிக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா இல்லை என்றும், ரத்த அழுத்த பிரச்சனை இருப்பதும் தெரியவந்தது.