அதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற கூட்டம்!

 

அதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற கூட்டம்!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் இணைந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித்தது வெறும் பேச்சோடு முடிந்து விட்டது. ஜனவரியில் நிச்சயம் கட்சி தொடங்குவேன், தேர்தலில் களம் காணுவேன் என ரசிகர்கள் மத்தியில் ஏத்திவிட்டு ஹைதராபாத்திற்கு ஷூட்டிங்கிற்காக சென்ற நடிகர் ரஜினிகாந்த், சென்னை வந்த பிறகு தான் கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்தார். இது ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அரசியலுக்கு வரக்கோரி ரஜினி ரசிகர்கள் போராட்டமெல்லாம் நடத்தியும் கூட, உடல்நலத்தை சுட்ட்டிக்காட்டி எஸ்கேப் ஆனார். அவருடைய முடிவை மறுபரிசீலனை செய்ய ரஜினிகாந்த் தயாராக இல்லை. இதனால் அதிருப்தியடைந்த ரஜினி மக்கள் மன்றத்தினர் மாற்றுக்கட்சியை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டனர்.

அதிமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற கூட்டம்!

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை ஹேமமாலினி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஜெ.ஜெயகிருஷ்னன் தலைமையில் 500 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.