ஸ்டாலினிடம் நேரில் ரூ.50லட்சம் நிதியுதவி வழங்கிய ரஜினி

 

ஸ்டாலினிடம் நேரில் ரூ.50லட்சம் நிதியுதவி வழங்கிய ரஜினி

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து கொரோனா நிவாரண நிதியுதவி அளித்துள்ளார்.

ஸ்டாலினிடம் நேரில் ரூ.50லட்சம் நிதியுதவி வழங்கிய ரஜினி

கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் நோக்கில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார். பொதுமக்கள், தொழிலதிபர்கள், சமூக அமைப்புகள் என யார் வேண்டுமானாலும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கலாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்ததுடன், அளிக்கப்படும் நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் அவர் உறுதி தெரிவித்தார்.முதல்வரின் வேண்டுகோளை அடுத்து திரை பிரபலங்களும், தொழிலதிபர்களும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கொரோனா நன்கொடையை வழங்கி வருகின்றனர்.

ஸ்டாலினிடம் நேரில் ரூ.50லட்சம் நிதியுதவி வழங்கிய ரஜினி

இந்நிலையில் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் அளித்தார்.முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபிறகு முதல் முறையாக ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து கூறியதுடன், கொரோனா நிவாரண உதவியை நேரில் வழங்கியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும” என்றும் கேட்டுக்கொண்டார்.முன்னதாக நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யா கொரோனா நிவாரண உதவி தொகையாக ரூ. 1 கோடியை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நேரில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.