• April
    09
    Thursday

Main Area

Main



எல்லோரும் எதிர்பார்த்த கனவுக் கூட்டணி! ரஜினியும் கமலஹாசனும் இணைந்து நடிக்கிறார்கள்?!

rajinikanth kamala hassan
rajinikanth kamala hassan

ரஜினியும் கமலும் எப்போது சேர்ந்து நடிக்கப்போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரிடமும் உள்ளது. இருவரும் கடைசியாக இணைந்து நடித்தது ஜெராப்தார் என்ற ஹிந்தி படத்தில். இதில் அமிதாப் பச்சனும் நடித்திருந்தார். 80, 90-களில் திரையுலகை ஆண்ட இந்த பெரும் நடிகர்கள் இணைந்து நடிப்பதாக பல செய்திகள் வந்தது. ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை. இப்போது 35 வருடங்களுக்கு பின்பு இருவரும் இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த செய்தி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

rajini-kamal.jpg1

மாஸ்டர் படத்தின் இயக்குனர் லோகேஷ்கனகராஜ் கமலிடம் ஒரு கதையை சொல்லியிருக்கிறார், இந்த கதைக்கு என்னை விட ரஜினி தான் பொருத்தமாக இருப்பார் என்று அவர் கூறியதாக தகவல்கள் வந்தது. பின் லோகேஷ் கனகராஜ் ரஜினியை சந்தித்து படத்திற்கு கதை கூறியதாகவும் தெரிகிறது. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவும் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் கமல் ஒரு சிறு பகுதியில் நடிப்பார் என்றும் தகவல்கள் வந்துள்ளது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக தமிழ் திரையுலகமே காத்திருக்கிறது.

2018 TopTamilNews. All rights reserved.