தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ரஜினியின் கோரிக்கை நிராகரிப்பு… கண்டிப்பாக நேரில் ஆஜர்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ரஜினியின் கோரிக்கை நிராகரிப்பு… கண்டிப்பாக நேரில் ஆஜர்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, வன்முறை வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் அரசியல் ஆசையில் இருந்த ரஜினி, தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார். அப்போது தூத்துக்குடியில் நடந்த சம்பவத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ரஜினியின் கோரிக்கை நிராகரிப்பு… கண்டிப்பாக நேரில் ஆஜர்!

விவகாரம் பூதாகரமானதையடுத்து இதுதொடர்பாக விசாரணை செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அரசு அமைத்தது. தற்போது விசாரணை 25ஆம் கட்டம் வரை நிறைவடைந்திருக்கிறது. 26ஆம் கட்டம் மார்ச் 15இல் தொடங்குகிறது. பாதிக்கப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள், காவல் துறையினர் என 640 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சர்ச்சை கருத்தைக் கூறிய நடிகர் ரஜினியும் ஆஜராக சம்மன் பிப்ரவரியில் சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது நேரில் ஆஜராகி ரஜினி காரணத்தை விளக்கினார். 24ஆவது கட்ட விசாரணையில் நடிகர் ரஜினிக்கு மீண்டும் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது ரஜினிக்குப் பதில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜரானார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ரஜினியின் கோரிக்கை நிராகரிப்பு… கண்டிப்பாக நேரில் ஆஜர்!

25ஆவது கட்ட விசாரணையின்போது காணொலியில் ஆஜராக ரஜினி விருப்பம் தெரிவித்தார். இதுகுறித்து அவரது வழக்கறிஞர் இளம்பாரதி, காணொலியில் விசாரணை நடந்தால் பதில் சொல்வதாக ரஜினிகாந்த் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனால் உடல்நலத்தைக் காரணம் காட்டி அவர் விசாரணையில் பங்கேற்கவில்லை. இச்சூழலில் ஒருநபர் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பல விஷயங்களைப் பகிந்துகொண்ட அவரிடம், ரஜினி ஆஜராவது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ரஜினியின் கோரிக்கை நிராகரிப்பு… கண்டிப்பாக நேரில் ஆஜர்!

அதற்குப் பதிலளித்த அவர், “காணொலி மூலம் அடுத்தக்கட்ட விசாரணையில் கலந்துகொள்ள ரஜினி சார்பாக அவர் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு அனுமதியளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு தான். அவர் கண்டிப்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.