• February
    24
    Monday

Main Area

Main



ஒரே வருஷத்துல ரஜினி முதல்வர்....! பின்னணியில் தயாராகும் மெகா ப்ளான்!

ரஜினி
ரஜினி

‘நான் அரசியலுக்கு வர்றது ஆண்டவன் கையில தான் இருக்கு’ என்று ரஜினி ஒவ்வொரு முறை பேசியப் போதும் தமிழக அரசியல்வாதிகள் அவரைக் கைப்புள்ளையாகவே பார்த்து வந்தார்கள். இவர் எல்லாம் அரசியல்ல தாக்கு பிடிக்க மாட்டாருப்பா!’ என்று எல்லா மேடைகளிலும் ரஜினியைக் கிண்டல் செய்து பேசி வந்தாலும் உள்ளூர ஸ்டாலின், கமல் உட்பட எல்லா அரசியல்தலைவர்களுக்குமே ரஜினியின் அரசியல் எண்ட்ரி பயத்தையும், கலக்கத்தையும் தான் கொடுத்திருக்கிறதாம். சரி.. இதெல்லாம் தான் எங்களுக்கே தெரியுமே? என்று அவசரப்படுகிறீர்களா?

rajini

நாம் சொல்ல வந்த விஷயம் அது கிடையாது. சட்டசபைத் தேர்தல் தான் இலக்கு என்று தலைவர் ஜகா வாங்கியதும் அவரை எல்லோரும் கிள்ளுக் கீரையாகவே விமர்சித்தார்கள். ஆனால், சட்டசபைத் தேர்தல் தான் இலக்கு என்று முடிவெடுத்து அறிவித்ததும், ரஜினி அப்படியே கிடப்பில் போடவில்லை. சட்டசபை தேர்தலுக்கான எல்லா வேலைகளையும் அப்போதிலிருந்தே பார்க்கத் துவங்கி விட்டார்.
வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு, தமிழகத்தின் முதல்வராவதற்கான எல்லா அடிப்படை வேலைகளையும், மெகா திட்டங்களையும் வகுத்து செயல்படுத்தவும் துவங்கிவிட்டார் என்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள். பா.ரஞ்சித் ரஜினியை வைத்து படம் இயக்கப் போகிறார் என்கிற தகவல்கள் வெளியான போதே, இது ரஜினியின் அரசியல் படமாக இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், இரண்டு படங்களிலும் ரஞ்சித், ரஜினி ரசிகர்களை ஏமாற்றி விட்டார். அதன் பிறகு முருகதாஸ் சொன்ன அரசியல் கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போனது. சுற்றிலும் தமிழ்நாட்டில் ஓநாய்களும், நரிகளுமாய் அரசியல்வாதிகள் இருக்கும் போது, தனது சாமர்த்தியத்தால் அவர்களை எல்லாம் தாண்டி எப்படி முதல்வர் நாற்காலியை ரஜினி பிடிக்கிறார் என்பது தான் படத்தோட ஒன்லைன். கிட்டத்தட்ட ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தைப் போல நாலு மடங்கு விறுவிறுப்பான திரைக்கதை என்று ரஜினி ஆசையாசையாய் தயாரான முருகதாஸின் ஸ்கிரிப்ட் அது. படத்துக்கு ‘நாற்காலி’ என்று பெயரெல்லாம் கூட முடிவு செய்திருந்தார்கள். 

rajini and murugadoss

இடையில், சட்டசபை தேர்தல் நெருக்கத்தில் இந்த படம் ரிலீசானால் தனது அரசியல் எண்ட்ரி இமேஜுக்கும் படம் உதவி செய்யும் என்று நினைத்த ரஜினி, முருகதாஸிடம் வேறு கதையைத் தயார் செய்ய சொன்னார். அது தான் ‘தர்பார்’ படமாக தயாராகி வருகிறது. இதற்கு அடுத்ததாக சன் டிவி தயாரிப்பில் சிவா இயக்கத்தில் நடித்து முடித்ததும், மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் ‘நாற்காலி’ படத்தை துவங்குகிறார் ரஜினி.
செம மாஸா, விறுவிறுப்பான திரைக்கதையோடு ‘நாற்காலி’ உருவாகி தமிழக அரசியலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிட்டத்தட்ட 96ம் வருஷம் நரசிம்மராவ் ஆட்சி மீது மக்களுக்கு இருந்த எதிர்ப்பலை மாதிரியான சூழலை  உருவாக்குகிற மாதிரியான ஸ்கிரிப்ட் அது என்கிறார்கள் முருகதாஸின் உதவியாளர்கள். படத்தை 2021ம் வருஷம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய முடிவெல்லாம் செய்துவிட்டார்கள். எப்படி ரமணா படம் விஜய்காந்த் இமேஜைத் தூக்கி நிறுத்தியதோ அதைப் போல ஒரு கதை அது என்கிறார்கள். 
சரி, ரஜினியின் அரசியல் எண்ட்ரி பற்றி முருகதாஸ் என்ன சொல்கிறார்? ரஜினி ஷூட்டிங் ப்ரேக்கில் அரசியல் பற்றி நிறைய பேசியிருக்கிறார். அவருடைய சில அரசியல் வியூகங்களும், திட்டங்களும் மக்களுக்கு ரொம்ப வியப்பாக இருக்கும். அவர் சொல்ற நிறைய விஷயங்கள் சாத்தியப்படக் கூடியதும், மக்களுக்கு பலன் தரக் கூடியதும் தான். அவர் சிங்கிளா தான் வருவார். நிச்சயமா சாதிப்பார் என்று தெரிந்தவர்களிடம் எல்லாம் ரஜினி பற்றி வியந்து வியந்து சொல்லி வருகிறாராம் முருகதாஸ்.
வா வா என் தலைவா!

2018 TopTamilNews. All rights reserved.