ரஜினி பிறந்தநாளுக்கு முன்பாக அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பார்!

 

ரஜினி பிறந்தநாளுக்கு முன்பாக அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பார்!

ரஜினிகாந்த் என்ன சொல்லப்போகிறார் என்ற குழப்பம் எனக்கும் உள்ளது என்று அவரது அண்ணன் அண்ணன் சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.

ரஜினி பிறந்தநாளுக்கு முன்பாக அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பார்!

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார். அதில் தனது இலக்கு சட்டமன்ற தேர்தலில் தான் என்று கூறிய ரஜினி அதற்கான ஆயத்தப் பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்து இருந்தார். ரஜினி இந்த அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

ரஜினி பிறந்தநாளுக்கு முன்பாக அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பார்!

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் நேற்று முன் தினம் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் சுமார் 2 மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், விரைவில் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பேன் என்றார்.

ரஜினி பிறந்தநாளுக்கு முன்பாக அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பார்!

இந்நிலையில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா அளித்த பேட்டியில், ” நிச்சயமாக பிறந்தநாளுக்கு முன்பாகவே தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை ரஜினிகாந்த் அறிவிப்பார்.நான் அவரிடம் பேசினேன். அவர் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பது எனக்கு தெரியாது.ஆனால் அவர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும். கொரோனா காலம் என்பதால் மருத்துவர்கள் ஆலோசனையைத் தொடர்ந்து  ரஜினிகாந்த் கேட்டு வருகிறார். அதனாலேயே காலதாமதம் ஆகிறது. ரஜினிகாந்த் கட்சி துவங்கினால் நானும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சேர்ந்து பிரச்சாரம் செய்வேன். அவர் அரசியலுக்கு வர வேண்டுமே என்று தான் நானும் நினைக்கிறேன்.அவர் என்ன சொல்வார் என்று எனக்கும் குழப்பமாக உள்ளது ” என்றார்.