Home சினிமா ரஜினி, விஜய்… அடுத்து யாருக்கு வில்லனாக போகிறார் விஜய் சேதுபதி?

ரஜினி, விஜய்… அடுத்து யாருக்கு வில்லனாக போகிறார் விஜய் சேதுபதி?

ரஜினி காந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ’பேட்ட’. இப்படத்தின் இன்னொரு ஸ்பெஷல், ரஜினிக்கு வில்லன் விஜய் சேதுபதி நடித்தது.

வழக்கமாக சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கும்போது வில்லனாக அறிமுகமாகி, பின் ஹீரோவாக மாறி விடுவர். அதன்பின் வில்லனாக நடிப்பதற்குத் தயங்குவர். ரஜினி, சத்யராஜ், சரத்குமார் போன்றோர்களை உதாரணமாகச் சொல்லலாம்.

ஆனால், விஜய் சேதுபதி கதாநாயகனாகத்தான் அறிமுகமானார். நடிக்க வந்தும் பத்தாண்டுகள்தாம் ஆகின்றன. அதற்குள் பல விதமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். முடி நரைந்த காமெடி ரவுடியாக சூது கவ்வும் படத்தில், சூப்பர் டீலக்ஸில் திருநங்கையாக, ஆரஞ்சு மிட்டாயில் வயதான பெரியவராக என நடிப்பின் பல பரிணாமங்களைக் கொண்டு வர முயல்கிறார்.

அதேநேரம் நானும் ரவுடிதான், சேதுபதி, ஜூங்கா, றெக்க மாதிரியான படங்கள் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார். இந்நிலையில் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்தார். எவ்வித தயக்கமுமின்றி வில்லனாக நடித்ததும் பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் ஆவலில் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என நினைத்தார்கள்.

ஆனால், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லன் விஜய் சேதுபதிதான் என்றபோது பலரின் புருவங்கள் வியப்பில் உயர்ந்தன. விஜய் சேதுபதி இப்படியே நடித்தால் அவரின் கரியர் அவ்வளவுதான் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், மாஸ்டர் படம் வெளியானதும் விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதி கேரக்டரும் புகழ்ந்து பேசப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் விஜய் கேரக்டரை விடவும் விஜய்சேதுபதி பாத்திரம் பலரால் சிலாகிக்கப்படுகிறது.

இந்நிலையில் ரஜினி, விஜய்க்கு அடுத்து விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அநேகமாக அது அஜித்தாக இருக்கக்கூடும் என்ற பேச்சு அடிபடுகிறது. அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இது முடிந்ததும் சிவா அல்லது மீண்டும் வினோத் படத்தில் அஜித் நடிக்க திட்டமிட்டிருப்பதாக்வும் இதில் வில்லன் விஜய் சேதுபதியை அணுகுவதாகத் தெரிகிறது.

விஜய் சேதுபதி அஜித்

அடுத்து தல யுடன் மோத விருக்கிறாரா விஜய் சேதுபதி?

மாவட்ட செய்திகள்

Most Popular

“இதுதான் ஊழலை ஒழிக்கும் லட்சணமா?” – மக்கள் நீதி மய்யத்தின் ரூ.1 லட்சம் பரிசுப் பொருட்கள் பறிமுதல்!

தமிழகத்தில் தேர்தல் குறித்தான அறிவிப்பை நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். அதன்படி ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அறிவிப்பு வெளியான இரண்டு மணி நேரத்திற்குப்...

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் மதிமுக, விசிக!

சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய திமுகவுடன் விசிக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்...

அதிமுகவில் 5 ஆயிரம் விருப்ப மனுக்கள்… சனிக்கிழமையில் இறுதி பட்டியல் வெளியீடு!

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அப்போதே முதல்வரும் துணை முதல்வரும் தங்களது ஆஸ்தான தொகுதியான...

சாமிதோப்பு அருகே குளத்தில் மூழ்கி இளைஞர் பலி!

கன்னியாகுமரி கன்னியாகுமரி அருகே குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அடுத்த ரோஜாபாளையத்தை சேர்ந்தவர்...
TopTamilNews