• August
    24
    Saturday

Main Area

Main



தண்ணி காட்டிய ரஜினி.. கதறடித்த கமல்..!

கமல் ஹாசன்
கமல் ஹாசன்
Loading...

மழைநீர் சவாலை ஆரம்பித்த அமைச்சர் வேலுமணி, அந்த சவாலை ஏற்கும்படி ஈஷாவின் நிறுவனராக ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட பிரபலங்களை அழைத்தார். ஏற்கனவே ’நதிகளை இணைப்போம்... காவிரியின் குரல்’ என்று நீரை வைத்து ஆன்மிக அரசியல் செய்து கொண்டிருக்கும் ஜக்கியும் அதனை ஏற்றுக் கொண்டு பதில் வினையாற்றினார்.

இதில் வேலுமணிக்கு செம்ம சந்தோஷம்தான். ஆனால் ரஜினியையும், கமலையும் இந்த முயற்சியில் இழுத்துவிட்டு கலர்ஃபுல் ஆதாயம் தேட முயன்ற அமைச்சருக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்கிறார்கள் அவரது வட்டாரத்தை அறிந்தவர்கள்.

எப்படி அது? என்று அவர்களிடமே கேட்டபோது “அமைச்சர் நீர் சவாலை வெளியிட்டதும், ஜக்கி வாசுதேவ் அதனை தானே முன் வந்து யதார்த்தமாக ஏற்றுக் கொண்டார் என்பதெல்லாம் கட்டுக்கதை. இருவருமே கோவையை சேர்ந்தவர்கள் எனும் வகையில் இருவருக்குள்ளும் பெரிய நெருக்கம் இருக்கிறது.

எனவே இந்த சவாலை வடிவமைத்ததுமே ஜக்கியிடம் இது பற்றி பேசப்பட்டது, அமைச்சர் அறிவித்ததும் ஜக்கியும் அதை ஏற்றுக் கொள்வது போல் பிளான் செய்தனர். ஈஷாவுக்கு தமிழகத்தில் மட்டும் பல லட்சம் பங்கேற்பாளர்கள் இருக்கும் நிலையில் அமைச்சரின் சவாலை தெறிக்கவிடலாம் என்பது அவரது டீமின் கணக்கு. ஆக ஜக்கி விஷயத்தில் அது நிறைவேறியது.

அதேபோல் சினிமா துறையில் ரஜினி மற்றும் கமல்ஹாசனையும் இந்த சவாலில் இழுத்து, வெளிப்படையாக அழைத்து, அவர்களை பதில் வினையாற்ற வைக்க முதலிலேயே பேசினர். ஆனால் அந்த இரு தரப்பிலிருந்தும் உருப்படியான ரெஸ்பான்ஸே இல்லை. இதனால் மனதளவில் வெந்துவிட்டார் வேலுமணி. அவரது நெருங்கிய கைகளோ, இரு மாஸ் நடிகர்களும் அமைச்சருக்கு அவமானம் ஏற்படுத்தியதாகவே இதை கருதி, ஊதி பெரிதாக்கினர். அமைச்சராலும் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முதல்வருக்கு அடுத்த நிலையில் அதிகார மையமாக வலம் வரும் தன்னை இரு உச்ச நடிகர்களுமே அவமதித்துவிட்டதாகத்தான் உள்ளூர கருதினார்.

இந்த நிலையில், இந்த சவால் வெளியான பிறகு ‘ரஜினி கமலெல்லாம் தமிழ்நாட்டுக்காக உயிரை விடுவது போல் பேசுகின்றனர். ஆனால் இந்த நல்ல முயற்சியான நீர் சவாலுக்காக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. எல்லாம் நடிப்புதானோ?’ என்று அவர்களை டேமேஜ் செய்து, உள்ளே இழுக்க முயற்சிக்கின்றனர்.” என்கிறார்கள்.

உலகம் முழுக்க பக்தர்களை வைத்திருக்கும் ஜக்கி வாசுதேவை மடக்க முடிந்த வேலுமணியால், சாதாரண நடிகரான ரஜினியை மடக்க முடியவில்லையே என்று கோடம்பாக்கம் கைகொட்டி சிரிக்க, ஆளும் அ.தி.மு.க. தரப்போ முழு டென்ஷன் ஏறிக் கிடகிறது.

2018 TopTamilNews. All rights reserved.