“ஆடுவெட்டி அண்ணாத்த போஸ்டருக்கு அபிஷேகம்! இதுபோன்ற அருவருப்பான செயலை செய்யவேண்டாம்”

 

“ஆடுவெட்டி அண்ணாத்த போஸ்டருக்கு அபிஷேகம்! இதுபோன்ற அருவருப்பான செயலை செய்யவேண்டாம்”

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. நீண்ட காலத்திற்கு பின் அவருடைய அண்ணாத்த படம் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். விநாயகர் சதுர்த்தியன்று அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியானது. இதனை கொண்டாடும் விதமாக திருச்சியில், ரஜினியில் ரசிகர்கள் சிலர், ஆட்டை பலி கொடுத்து, கட்அவுட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் அவரது ரசிகர்கள் ரத்தாபிஷேகம் செய்தனர்.

“ஆடுவெட்டி அண்ணாத்த போஸ்டருக்கு அபிஷேகம்! இதுபோன்ற அருவருப்பான செயலை செய்யவேண்டாம்”

இதற்கு கண்டனம் தெரிவித்து அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அண்ணாத்த திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மீது சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளஙளில் பரவிவருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கதுல். அருவருப்பான இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடவேண்டாமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.