’ரஜினி கட்சி தொடங்க வில்லை’ – யாருக்கு சாதகம்… யாருக்கு பாதகம்?

 

’ரஜினி கட்சி தொடங்க வில்லை’ – யாருக்கு சாதகம்… யாருக்கு பாதகம்?

பல்லாண்டுகளாகப் பேசப்பட்ட வந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேச்சுகள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன. இந்த ஆண்டு டிசம்பர் 31–ம் தேதி அறிவிப்பு, ஜனவரியில் கட்சி என்று ரஜினி தெரிவித்தார். ஆனால், ஹைதராபாத்தில் அண்ணாத்தே படப்பிடிப்பில் பலருக்கும் கொரோனா வர, ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தற்போது, ’நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டார்.

’ரஜினி கட்சி தொடங்க வில்லை’ – யாருக்கு சாதகம்… யாருக்கு பாதகம்?

ரஜினியின் உடல்நிலை குறித்து நன்கு அறிந்த அவரின் நெருங்கி வட்டாரம் தொடக்கம் முதலே ரஜினியின் அரசியல் பிரவேசத்தைத் தடுத்தது. அது தற்போது நிறைவேறி விட்டது. ரஜினியின் இந்த முடிவு தமிழக அரசியல் களத்தில் யாருக்கு சாதகமாக அமையும்… யாருக்குப் பாதகமாக அமையும்?

சாதகம்: ரஜினி கட்சி ஆரம்பித்தால், அவர் பிரிப்பது இரண்டு வகை வாக்குகள்தான். ஒன்று, புதிய தலைமுறை வாக்குகள். அடுத்தது, இப்போதைய ஆட்சி மீதான எதிர்ப்பு வாக்குகள். இதில் இரண்டாம் வகை வாக்குகள் திமுக கூட்டணிக்கே பெரும்பாலும் செல்லக்கூடியவை. அதனால், நேரடியாக குறிப்பிட்ட அளவு சாதகம் திமுக கூட்டணிக்கு.

’ரஜினி கட்சி தொடங்க வில்லை’ – யாருக்கு சாதகம்… யாருக்கு பாதகம்?

அடுத்து புதிய தலைமுறை வாக்குகளை அதிகம் நம்பியிருப்பது நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் கமல் ஹாசன். ரஜினி வந்தால் இருவரின் வாக்குகளில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். ரஜினியின் விலகலால் இந்த இரு கட்சிகளுக்கும் முந்தைய தேர்தல் வாக்கு சதவிகிதத்தை விட அதிகரிக்கவே வாய்ப்பிருக்கிறது.

’ரஜினி கட்சி தொடங்க வில்லை’ – யாருக்கு சாதகம்… யாருக்கு பாதகம்?

ரஜினியின் கட்சியை வைத்து அதிமுக தொகுதி பங்கீட்டையும் துணை முதல்வர் கேட்கும் மனநிலையில் பாஜக, பாமக இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது ரஜினி முடிவால் அதிமுகவுக்கு ஒரு ரிலாக்ஸ் மனநிலை வாய்த்திருக்கிறது.

பாதகம்: முதல் பாதகம் பாஜகவுக்கே. ஏனெனில், ரஜினியை தங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த பாஜகவினர் நினைத்தனர். இந்து முன்னணியின் அர்ஜீன் சம்பத் ஒரு பேட்டியில் திராவிடக் கருத்துக்கு எப்படி எம்.ஜி.ஆரைப் பயன்படுத்தினார்களோ… அதுபோல ஆன்மிக கருத்தியல் அரசியலுக்கு ரஜினியைப் பயன்படுத்துவோம் என்று கூறியிருந்தார்.

’ரஜினி கட்சி தொடங்க வில்லை’ – யாருக்கு சாதகம்… யாருக்கு பாதகம்?

மேலும், ரஜினியின் வருகையை வைத்து அதிமுகவிடம் தொகுதி பேரத்தை அதிகப்படுத்த நினைத்த பாஜகவுக்கு பெரும் பின்னடைவு. இறுதியில் தங்களுக்கு ஆதரவாக ஒரு வீடியோவாவது ரஜினியிடமிருந்து எதிர்பார்க்கும். ஆனால், சிஸ்டம் சரியில்லை என்று சொல்லிவிட்டு பத்தாண்டுகளாக ஆளும் கட்சியின் கூட்டணிக்கு ஆதரவாக வீடியோ செய்வது சரியிருக்காது என்று ரஜினி நினைத்து தவிர்க்கக் கூடும்.

ரஜினியினோடு தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்றும் பாஜகவினர் நினைத்திருக்கக்கூடும். அப்படியிருக்கும்பட்சத்தில் அதற்கும் பெரும் இழப்புதான். தமிழருவி மணியன் போன்றவர்களுக்கு ஏற்படும் பாதகத்தை தனியே சொல்ல வேண்டும்.

’ரஜினி கட்சி தொடங்க வில்லை’ – யாருக்கு சாதகம்… யாருக்கு பாதகம்?

வெகு நிஜமான இழப்பு என்றால், ரஜினிக்காக 45 ஆண்டுகளாக கொடி கட்டிய, போஸ்டர் ஒட்டிய, பாலாபிஷேகம் செய்த ரசிகர்களுக்குத்தான் இழப்பு.