“பாடும் நிலா… எழுந்து வா” : எஸ்பிபி-க்கான கூட்டுப் பிரார்த்தனையில் ரஜினி பங்கேற்பு!

“பாடும் நிலா… எழுந்து வா” : எஸ்பிபி-க்கான கூட்டுப் பிரார்த்தனையில் ரஜினி பங்கேற்பு!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு  கடந்த 5ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து தற்போது அவருக்கு எக்ஸ்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

“பாடும் நிலா… எழுந்து வா” : எஸ்பிபி-க்கான கூட்டுப் பிரார்த்தனையில் ரஜினி பங்கேற்பு!

இதுகுறித்து நேற்று பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், இயற்கை அன்னையை பிரார்த்திக்கும் வகையில் இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அனைத்து திரைப்பட நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள், பெப்சி அமைப்பினர், தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், ஊடக கலைஞர்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் நாளை 20-8-2020 (வியாழக்கிழமை) இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தங்களுக்குப் பிடித்த எஸ்.பி.பி பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கூட்டுப் பிரார்த்தனைக்கு உலகமெங்கும் வாழும் மக்களை அன்புடன் அழைக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

“பாடும் நிலா… எழுந்து வா” : எஸ்பிபி-க்கான கூட்டுப் பிரார்த்தனையில் ரஜினி பங்கேற்பு!

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாடும் நிலா… எழுந்துவா! கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்… எஸ்பிபியை மீட்டெடுப்போம் 20.8.2020 இன்று மாலை 6 முதல் 6.05 வரை” என்று குறிப்பிட்டுள்ளார்.