‘ரஜினி மக்கள் மன்றத்தினர்’ எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்!

 

‘ரஜினி மக்கள் மன்றத்தினர்’ எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்!

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக பல ஆண்டுகளாக கூறி வந்த ரஜினிகாந்த், அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார். ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவேன் என உறுதிப்பட தெரிவித்த அவர், உடல்நிலை காரணமாக தான் கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்து விட்டார். ரஜினியின் அரசியல் வருகையை பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த ரசிகர்களுக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

‘ரஜினி மக்கள் மன்றத்தினர்’ எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்!

ரஜினியை அரசியலுக்கு அழைத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரசிகர்கள் போராட்டம் நடத்தியும், தனது முடிவை ரஜினி மாற்றிக் கொள்வதாக இல்லை. தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்த அவர், இது போன்ற போராட்டங்கள் நடத்தி தன்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் ரஜினி அரசியலுக்கு வரப்போவது இல்லை என்பது உறுதியானதால், மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

‘ரஜினி மக்கள் மன்றத்தினர்’ எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்!

அண்ணா அறிவாலயத்தில் நேற்று மு.க ஸ்டாலின் முன்னிலையில், தூத்துக்குடி, தேனி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் விரும்பினால் பதவியை ராஜினாமா செய்து விட்டு எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் அறிவித்துள்ளார். வேறு கட்சிகளில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் ரஜினி ரசிகர் தான் என்பதை மறந்து விடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.